Monday, February 22, 2010

கவிதை முயற்சி


வித்யாசம்
பள்ளி - பாடம் படித்த பின்பு சோதனை
வாழ்கை - சோதனைக்கு பின்பு பாடம்
பள்ளி- கற்றுகொடுபவரெல்லாம் ஆசிரியர்
வாழ்கை-யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்
பள்ளி-கால அட்டவணை
வாழ்கை-கடந்த காலம் தான் அட்டவணை
பள்ளி-படித்தும் முட்டாள் ஆக்குகிறது
வாழ்கை-படிக்காட்டியும் மேதை ஆக்குகிறது
பள்ளி-காதலை கூட அரும்ப வைக்கும்
வாழ்கை-கடமையால் காதலை கூட இழக்க வைக்கும்
பள்ளி-பட்டம் பெறுவதற்கு
வாழ்கை-பட்டு திருந்துவதற்கு
பள்ளி- தேர்வில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் சந்தர்பம் தருகிறது
வாழ்கை-ஜெய்தவன் என்று மார்தட்டி கொண்டாலும் மரணம் காத்திருக்கிறது
பள்ளி-புத்திசாலிகளை உருவாகிறது
வாழ்கை-ஞானிகளை உருவாகிறது

ஒரே ஒற்றுமை
--------------------------
இரண்டிலுமே படித்துகொண்டே இருக்கிறோம்( தேர்ச்சி பெருகிரோமோ இல்லையோ )
பள்ளியில் பாடத்தை..
வாழ்கையில் நம்மை ..

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யோசிக்கிறேன்

பெண்
இவளை போற்றாத கவிஞர் இல்லை..
பார்த்து மயங்காத ஆடவர் இல்லை..
இவள் பெயர் இல்லாத நதி இல்லை..
இவள் ஒப்பிடாத அழகான பொருள் இல்லை..
காவியம் ஆக்குகிறாள்,காவி துறவியையும் மாற்றுகிறாள்...
ஆனாலும்,

ஏன் இவளை சக மனுஷியாக மட்டும் இந்த உலகம் நினைப்பதில்லை?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஏக்கம்

ஆயிரம் திட்டு வாங்கினாலும்,
அம்மா கையால்
திகட்டாத சாப்பாடு எங்கே?
கையில் பிரம்புடன்
வாசலில் நின்றாலும்
கரும்பாய் இனிக்கும் அப்பா எங்கே?
வீட்டில் அறைகள்
குறைவாக இருப்பினும்
மனம் நிறைந்து இருந்ததே?
தொலை தொடர்பு வளர்ந்து விட்டது
அனால் அன்பு தொல்லைகள்
குறைந்து விட்டதே..
பாதி ஜிலேபிக்கு சண்டை போட்டாலும்,
பாதி இரவில் கண் விழித்து எனக்காக
அயல் நாட்டில் இருந்து
அழைக்கும் அண்ணன் தம்பிகளின் குரல்...
கைபேசியும்,தொலை(தொல்லை) பேசியும்
மின்னஞ்சலும் ,குறுந்தகவல்களும்
இன்று குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டதே...

மகளிர் விடுதி,என் அறையில் இருந்து........
தனிமையில்......
நான்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு : இந்த படைப்புgal என் சுய முயற்சி,மறுமொழி வரவேற்கப்படுகிறது
--






--
என்றும் அன்புடன்,
சிந்தியா பிரான்சிஸ்

புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறீர்களா?

புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறீர்களா? புதிய இடம், சூழ்நிலை, மனிதர்கள் என எல்லாம் உங்களை மிரள வைக்கிறதா? நிலைமை யை சகஜமாக்கிக் கொள்ள இதோ சில ஆலோசனைகள்.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் உங்களை வேலையில் அமர்த்திய மேலதிகாரியைப் பார்த்து நீங்கள் வேலையில் சேர்ந்து விட்ட விவர த்தைத் தெரிவியுங்கள்.

உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகள் என்ன என்பதை சம்பந்தப் பட்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களாகக் கூப்பிட்டு வேலையைத் தருவார்கள் என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.
உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை எப்படிச் செய்வது என்று குழப்பமாக இருந்தால், தயங்காமல் உங்கள் சந்தேகங்களைத் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலதிகாரி முதல் பியூன் வரை அனைவரிடமும் சினேகப் புன்னகையை வீசுங்கள். உங்களை நீங்க ளாகவே அறிமுகப் படுத்திக் கொள்ளலாம் அல்லது உங்களுக்குத் தெரிந்த வேறு யாரேனும் அங்கு இருந்தால் அவர்களை விட்டு உங்களை அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கச் சொல்லுங்கள்.

சக ஊழியர்களின் பெயர், கல்வித் தகுதி போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.அனாவசியமாக அவர்களது அந்தரங்க விஷயங்களைக் கிளறாதீர்கள்.

உணவு இடைவேளையின்போது நீங்கள் மட்டும் தனித்து சாப்பிடாமல் யாருடனாவது சேர்ந்து சாப்பிடலாம். அதற்கு முன் அவர்களிடம் அனுமதி கேட்டுக் கொள்வது நாகரிகம்.

பெரிய இடத்து சிபாரிசு காரணமாக உங்களுக்கு அந்த வேலை கிடைத்திருக்கலாம். அதற்காக உங்கள் செல்வாக்கைக் காட்டிக் கொள்ளும் படி பேசவோ, சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளவோ வேண்டாம்.

வேலை இல்லாவிட்டால் கேட்டு வாங்கிச் செய்யுங்கள். விட்டால் போதும் என்று புத்தகம் படிக்கவோ, அரட்டை அடிக்கவோ, தொலைபேசியில் அரட்டை அடிக்கவோ ஆரம்பித்து விடாதீர்கள்.

கடைநிலை ஊழியராக இருந்தாலும் அவர்களையும் மரியாதையாக நடத்த ஆரம்ப நாள் முதலே கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் படிப்பிற்கும், கிடைத்திருக்கும் வேலைக்கும் துளியும் சம்பந்தமே இல்லாமலிருக்கலாம். எனவே அனுபவஸ்தர்களிடம் உங்கள் வேலைகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு செய்ய ஆரம்பியுங்கள்.

இதற்கு முன்பாக நீங்கள் வேலை பார்த்த இடத்தைப் பற்றியோ, அந்த இடத்து ஊழியர்களைப் பற்றியோ, புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள இடத்தில் விமர்சனம் செய்யாதீர்கள்.

மேலதிகாரிகளைப் பற்றி சக ஊழியர்களிடம் வம்பு பேச வேண்டாம். அவர்களாக உங்களிடம் வலிய வந்து பேசினாலும் நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள்.

உங்கள் உடையோ, பேச்சோ, நடவடிக்கைகளோ பிறரைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் அநாகரிகமாக இருக்க வேண்டாம். முதல் பார்வையிலேயே உங்களை மரியாதைக்குரிய நபராகக் காட்டிக் கொள்ளும்படி அவை அமையட்டும்.

மேலதிகாரியுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். வேலை செய்யும் விதத்திலோ, சம்பளத்திலோ, வேறு விஷயங்களிலோ உங்களுக்கு ஏற்படும் அதிருப்திகளை உடனுக்குடன் மேலதிகாரியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

--
என்றும் அன்புடன்,
சிந்தியா பிரான்சிஸ்

இனிய உறவுக்கு 8 டிப்ஸ் !

எந்த சின்ன விஷயமும் நமக்கு ஓர் நெருக்கடியாகி விடுகிறது. வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப்போல எண்ணத் தொடங்குகிறோம். கொஞ்சம் நிதானமாக யோசித்தால், நாம் பெரிதுபடுத்திய பல விஷயங்கள் அற்ப விஷயங்கள் என்பது புலனாகும். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற மனோபாவம் வந்து வெற்றிப் பாதையை அமைத்துக்கொடுத்து விடும்.


சின்ன விஷயங்களைச் சின்ன விஷயங்களாக நாம் பார்க்க முடியாதபோது இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விஷயங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டால், அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன. யோசித்துப் பார்த்தால் எல்லாமே சின்ன விஷயங்கள்தான். ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும். எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம். வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோபாவங்களே காரணமாகின்றன.


1. சாதிக்க வேண்டுமென்றால் ...

மன அமைதியே மனித ஆற்றலின் ஊற்றுக் கண்ணாகவும் விளங்குகிறது. அமைதி நிலையில்தான் ஆற்றலை முழுமையாக ஒருமுகப்படுத்தவும் முடியும். எனவே, மன அமைதிக்கு முதலிடம் கொடுங்கள். சாதனைகள் தாமாகவே தொடரும்.


2. பிறருடன் பேசும்போது...

ஒருவருடன் பேச ஆரம்பிக்கும்போது, அவர் பேசுவதை முழுமையாகக் கேட்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். குறுக்கிட வேண்டும் என்று தோன்றினாலும் குறுக்கிடாதீர்கள். அவர் சொல்வதை நீங்கள் முழுமையாகக் கேட்ட பிறகு, நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்பதைத் தீர்மானித்துத் தெளிவாகப் பேசுங்க. இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் கருத்துப் பரிமாற்றம் எளிதாகும். மற்றவர்கள் அன்பும் சுலபமாகக் கிடைக்கும். மற்றவர்களை நீங்கள் பேச அனுமதித்து அக்கறையுடன் கவனிக்கின்றபோது, நீங்கள் சொல்வதையும் கவனிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கும் தானாகவே ஏற்பட்டு விடும்.


3. குப்பை எண்ணங்கள் வேண்டாமே !

எதிர்மறையான, பலவீனமான எண்ணங்கள் மன அமைதியைத் தகர்த்து சீர்குலையச் செய்யும் சக்தி படைத்தவை. இதுபோன்ற எண்ணங்கள் குமுறிக் கொப்பளிக்கிறபோது அசாத்தியமான மனஇறுக்கத்தை நீங்கள் அசைபோடுகின்றபோது எவ்வளவு மோசமான மனநிலைக்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.

ஒரு எதிர்மறை எண்ணம் இன்னொரு எதிர்மறை எண்ணத்துக்கு உங்களை இட்டுச் சொல்கிறது. விளைவாக குழப்பமான போராட்டத்தை மிக்க மனநிலைக்கு நீங்கள் ஆளாகிப் போகிறீர்கள்.


இதுபோல் எதிர்மறை எண்ணம் என்கிற குப்பை தொடர்ந்து மனதுக்குள் சேர ஆரம்பிக்கிறது. விளைவு என்ன ? மனம் கவலை களும் வேதனைகளும் நிரம்பிய குப்பைத் தொட்டியாகி விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அல்லது கவலைகள் மனத்தில் வேகம் பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக, பிரச்னைகள் பற்றிய கவலைகளே அதிகமாகி மனத்தில் பாரம் அதிகரித்து விடுகிறது.


4. யார் சரி ? யார் சரியில்லை ?

எப்போதுமே நீங்கள் நினைப்பது சரியாகவே இருக்கும் என நிரூபிப்பது அவசியமா ? - என்கிற இரண்டு நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பல சந்தர்ப்பங்களில் இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதில்லை. நம்முடைய அளவுகோல்களை வைத்துக் கொண்டு மற்றவர்களைத் திருத்துகின்ற வேலையில் நாம் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் அபிப்ராயங்கள் நம்மைப் பாதிக்காதவரை அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிலை மற்றவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்குமானால், அதைக் கெடுக்காமல் அந்த சந்தோஷத்தில் நாமும் பங்கு பெறலாம்.


5. விரும்புவது கிடைக்காவிட்டால்..

நாம் விரும்பியது கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடவும் முடியாது. எது கிடைக்கிறதோ, அதை விரும்ப கற்று கொள்ள வேண்டும். விரும்புகின்றபடியே எல்லாம் நடக்காது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நமக்கக் கிடைத்ததை விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும்.

6. பிறர் விஷயத்தில் பொறுமை..

நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது ? இருப்பதை அல்லது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் பொறுமையினை இழக்க வேண்டிய அவசியமே இருக்காது. சுலபத்தில் கோபப்படுகிறோம், வெறுப்படைகிறோம். இது தேவைதானா என்று சில வினாடிகள் யோசித்துப் பார்த்தால், எவ்வளவு அற்பமான காரியங்களுக்கெல்லாம் நாம் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம் என்பது புரியும்.பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகி விடும்.


மற்றவர்களின் செயல்களைக் கண்டு பொறுமை இழக்காதீர்கள். அவர்கள் செய்வது அறியாமையின் விளைவு என்று நீங்கள் நினைத்தால், பொறுமை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.


7. எங்கே இருக்கிறது திருப்தி ?

""திருப்தி என்பது என்ன ? பணத்தால் திருப்தி ஏற்பட்டு விடுமா...? பத்தாயிரம் ரூபாய் கையிலிருந்தால், இருபதாயிரம் ரூபாய் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். ஒரு வீடு சொந்தமாக இருந்தால், இன்னொரு வீடு எப்போது வாங்கலாம் என்கிற ஆசை பிறக்கும். இல்லாவிட்டால் இந்த வீட்டை மேலும் விரிவுபடுத்தலாம் என்கிற ஆசை பிறக்கும். எல்லா வசதிகளுமே இப்படித்தான். திருப்தி என்பது தொடுவானம் போன்றது. நெருங்க நெருங்க தூர விலகிச் சென்று கொண்டே இருக்கும்.


8. மற்றவர்களைத் திருத்துவதா ?

ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. அது சாத்தியமுமில்லை. நம்முடைய நேரம்தான் வீணாகும். நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண் வேலை.





--
என்றும் அன்புடன்,
சிந்தியா பிரான்சிஸ்

மகிழ்ச்சிக்கு வழிகள்.


சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்...ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத்
திருப்தி ஏற்படுவதில்லை.

நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்குசரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

சிரியுங்கள் மனம் விட்டு.

சிரியுங்கள்.“மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.


இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

தெளிவாகச் செய்யுங்கள்.

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும்
காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார்.
விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

மற்றவர்களையும் கவனியுங்கள்

நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும். ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள்.

--
என்றும் அன்புடன்,
சிந்தியா பிரான்சிஸ்

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள்



தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழந்தாலும் கீழ் காணும் எளிய முறைகளை பின்பற்றினால் இலட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.


* ஆடை - உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக்கூடிய நல்ல தரமான ஆடைகளை அணியலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாகா இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கபடுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகலுக்கு உண்டு. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்

* வேக நடை - அட வேக நடை என்ன ஆக போகிறது என்று தானே நினைக்க போறிங்க?? ஒருவரது நடையை வைத்தே அவர் சோம்பேரியா இல்லை தெம்பானவரா என்பதை அறியலாம். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு இவரால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே உங்கள் வழமையான நடையில் இன்னும் 25% அதிகமாக்குங்கள்.

* நிமிர்ந்த நிலை - எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கவிட்ட படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது , தலையை தொங்கப்போடமால் இருப்பது, எதிரில் உள்ள்வர்களின் கண்களை நேரே பார்ப்பது, பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணங்களாகும். பார்ப்பவர்க்கு நாம் தன்னம்பிக்கை உடையவர் என்ர உணர்வை உண்டாக்கும்.
[/b]

* கேட்பது - நல்ல விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 - 60 நொடிக்குள் உங்களது இலட்சியம் மற்றும் எதிர்காலம் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சத்தமாக பேசி பழகுங்கள். அல்லது எப்பொழுது தன்னம்பிக்கையை தூண்ட வேன்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லி பாருஙள்.

* நன்றி - உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள்.அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போதுதான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புக்கள் மற்றும் தன்னம்பிக்கை உண்டாக்ககூடிய விஷயங்களை நம் வாழ்வில் நடந்து உள்ளன என தெரியும். இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ வழி வகுக்கும்.

* மனதார பாராட்டுங்கள் - நம்மை நாமே "நெகட்டிவ்" ஆக நினைக்கும்போது மற்ற்வர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவ் ஆக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்ட கற்று கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் பெரிதாக பாராட்டுங்கள். மற்றவர்கள் பற்றி குறை கூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்து போகும்.. இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

* முன்னால் உட்காருங்கள் - மற்றவர்களின் நல்ல குணாதிசயங்களை பார்க்கும்போது நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங்களும் தானே வெளிவரும். பாடசாலை, பொது விழாக்கள், மற்றும் கூட்டங்களில் அமரும்போது எப்போதும் பின் இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே இனிமேல் எங்கு சென்றாலும் முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். மனதில் உல்ல பயம் போய் நம்பிக்கை அதிகரிக்கும்.

* பேசுங்கள் - சிலர், பலர் கூடி இருக்கும்போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம் தான். இனி பயம் இன்றி உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்து பேசுங்கள். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்கள் உங்களை தலைவர்களாக ஏற்று கொள்வர். எல்லோரிடத்திலும் தரியமாக பேசினாலே தன்னம்பிக்கை உங்களை தேடி வரும்.

* உடல்வாகு - நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீது நமக்கே நம்பிக்கை இழக்க நேரிடும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக வைத்து கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாகும்.

* நாடு - நாடென்ன செய்தது நமக்கு, என கேள்விகள் கேட்பது எதற்கு?? நாம் என்ன செய்தோம் அதற்கு என்று நினைத்தால் நன்மை நமக்கே..! நம்மை பற்றியே எப்போதும் சிந்திக்க கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்களையும் சமுதாயத்தையும் பற்றியும் சிந்திக்க வேண்டும். "கடமையை செய் பலனை எதிர்பாராதே" இது நாவுக்கரசரின் அழகிய வரிகள். எனவே பிறருக்காகவும் வாழ பழகுவோம்..!



--
என்றும் அன்புடன்,
சிந்தியா பிரான்சிஸ்

About Cynthia

Cynthia is my friend. I met her in one of the critical stages of my life and she played a major role in getting me back on track.

Off late she has found passion in writing. And that too writing in Tamil. I wish this be read by others. She is not a fun writer but a serious person though she has good humor sense.

With this I start posting her topics.

Enjoy reading her posts here......